ஆர்.எப்.எம். சுஹெல் – நுவரெலியா குறூப் நிருபர்

www.bbcmirror.lk

www.Lankawebnews.lk

මාධ්‍යවේදී  ආර්.එෆ්.එම්.සුහෙල් – නුවරඑළිය

மெதகும்புர தோட்டத்தில் ‘Children of Tomorrow’ வெற்றிகரமான மருத்துவ முகாம்

ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களின் தாய்மார்களின் நலனை முன்னிலைப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட ‘Children of Tomorrow’ மருத்துவ முகாம், ஒக்டோபர் 3ஆம் திகதி முழுநாளும் நுவரெலியா – தலவாக்கலை மெதகும்புர தோட்டத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

அல்பிட்டிய பிளான்டேஷன்ஸ் பி.எல்.சி., கொழும்பு கிழக்கு ரோட்டரி கழகம் மற்றும் மெல்ஸ்டா வைத்தியசாலை ஆகியன இணைந்து இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்வின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு ஒக்டோபர் 2ஆம் திகதி மெதகும்புர தோட்டத்தில் நடைபெற்றதுடன், பிரதம அதிதியாக லியோன் ரஞ்சித் உள்ளிட்ட சிறப்பு அதிதிகள், வைத்தியர்கள், அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தோட்ட சமூகத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களின் தாய்மார்களின் சுகாதார நிலை மற்றும் நலனை மேம்படுத்தும் நோக்கில் இந்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மெல்ஸ்டா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் தகைமை பெற்ற மருத்துவக் குழுவினரின் பங்கேற்புடன் நடைபெற்ற முகாமில், மருத்துவ ஆலோசனைகள், சுகாதாரப் பரிசோதனைகள், போஷாக்கு தொடர்பான ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய சுகாதார சேவைகள் வழங்கப்பட்டன.

தோட்ட சமூகத்தினரிடமிருந்து இந்த மருத்துவ முகாமுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததுடன், ஒன்று முதல் ஐந்து வயதுக்கிடைப்பட்ட சுமார் 270 சிறுவர்களும் சுமார் 150 தாய்மார்களும் இதில் கலந்துகொண்டு மருத்துவ, சுகாதார மற்றும் போஷாக்கு சேவைகளைப் பெற்றுக்கொண்டனர்.

தோட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு ஆரோக்கியமானதும் சிறந்ததுமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முக்கியமான சமூகப் பணியாக இந்த மருத்துவ முகாம் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *